திருக்கோஷ்டியூரில் பிப்.27 தெப்பத்திருவிழா டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை

திருப்புத்தூர், பிப். 21: திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மக தெப்ப உற்சவம் விழா சிறப்பாக நடைபெறும்.

இதற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்தாண்டு தெப்ப விழாவிற்கு பிப்.18ம் தேதி காப்பு கட்டுதலோடு துவங்கியது.  பிப்.27ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருக்கோஷ்டியூரில் நேற்று தெப்ப உற்சவ விழாவை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பாதுகாப்புகள் குறித்தும், திருப்புத்தூர் டிஎஸ்பி பொன்ரகு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊராட்சி மன்றத்தலைவர்கள், கோயில் நிர்வாகிகள், அறநிலைத்துறை, தீயணைப்புத்துறை, அரசியல் கட்சி பிரமுகர்கள், கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தெப்ப திருவிழாவிற்காக செய்ய வேண்டி பாதுகாப்புகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Related Stories:

>