×

திருப்பரங்குன்றம் தவிர வேறு பிரச்சனை இல்லையா?… வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதிகள் காட்டம்

 

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கு 5.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; அப்போது கோவில் தரப்பு மற்றும் மத்திய தொல்லியல் துறை வழக்கறிஞர்கள் கூறுகையில் , மனுதாரர் இதுபோன்று பல்வேறு வழக்குகளை, உரிய ஆய்வு மேற்கொள்ளாமல், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ,பொத்தம் பொதுவாக பொது நல மனு தாக்கல் செய்து வருகிறார்.

எனவே இவருக்கு, அபராதம் விதிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள்; திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக எத்தனை மனுக்கள்தான் தாக்கல் செய்வீர்கள்? திருப்பரங்குன்றத்தை தவிர வேறு பிரச்சனை இல்லையா? இதுபோன்று வழக்கு தாக்கல் செய்து இதை வைத்து அரசியல் லாபம் அடைவது இதை வேலையாக வைத்துள்ளார்கள். நீதிமன்றத்துக்கு வேறு வேலை இல்லையா? ஊடகங்களில் பெயர் வரவேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் வைப்புத் தொகையை கோயிலுக்கு கட்டினால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும். மனுதாரர் கே.கே.ரமேஷுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் இதுபோன்று வழக்கு தாக்கல் செய்யமாட்டேன் என மனுதாரர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அபராதத் தொகை கட்ட முடியாது என்று கூறிய மனுதாரர் ரமேஷ், இனிமேல் இதுபோன்ற வழக்கு தொடர மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார்.

Tags : Madurai ,Deepam ,Thirupparangunram hill ,K. ,Madura ,Thirupparangunaram hill ,K. Ramesh Petition ,Court ,
× RELATED ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை...