×

திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு: உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பரப்புரையில் ஈடுபடுகிறார்

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக சென்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், இன்று காலை 7 மணிக்குச் சின்னமலை எல்.டி.ஜி. சாலையில் தொடங்கி, ஆரோக்கியமாதா நகரில் உள்ள 1வது மற்றும் 2வது தெருக்கள், தாமஸ் நகர், பிஷப் காலனி, கக்கன்புரம், ரெங்கராஜபுரத்தில் உள்ள 1 முதல் 5 தெருக்களிலும், பொன்னியம்மன் கோயில் தெரு, வெங்கடாபுரம், வெங்கடாபுரம் குடிசைப் பகுதி, விநாயகர்கோயில் தெரு, வேளச்சேரி சாலை, ஆஞ்சநேயர் கோயில் தெரு, செல்வரங்கராஜா தெரு, துளசிங்க தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மா.சுப்பிரமணியனுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து, தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

பரப்புரையின்போது கடந்த 5 ஆண்டுகளில் திமுக செயல்படுத்திய நலத்திட்டங்கள், அரசின் செயல்பாடுகளால் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை எடுத்துக்கூறியும், சைதாப்பேட்டை தொகுதியில் செயல்படுத்டிய வளர்ச்சித் திட்டங்களைச் சொல்லியும் வாக்கு சேகரித்தார். மேலும், திமுக அறிவித்துள்ள வாக்குறுதிகளை முன்வைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ்குமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், திமுக பகுதி கழக செயலாளர் இரா.துரைராஜ், காங்கிரஸ் ஜோதிபொன்னம்மபலம், முத்தமிழ், விசிக ஜேக்கப், மநீம வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் பங்கேற்றனர்.
இன்று மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்ட தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுகிறார்.

Tags : DIMUKA ,MA ,Subramanian ,Assistant Secretary ,Stalin ,Chennai ,Saithappettai Assembly Constituency ,Non-Religious Progressive Alliance ,Sinnamalai L. D. G. ,Aarokiyamata ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...