வருவாய்த்துறை போராட்டம் திருவாடனையில் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவிப்பு

திருவாடானை, பிப். 21: வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 17ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை அடுத்து திருவாடானை தாலுகா அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால்  சாதி, வருமானம், இருப்பிடம், விதவைச்சான்று, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற அனைத்து பணிகளும் முடங்கிக் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சான்று பெற முடியாமல் தவித்து வருகின்றனர். திருவாடானை தாலுகாவில் மட்டும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே அரசு உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனைவருக்கும் தடையின்றி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: