×

சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்: பெல்ஜிய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் மெஹூல் சோக்சி கடந்த 2023ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்றபோது அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தனது நாடு கடத்தலை எதிர்த்து மெஹூல் சோக்சி ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்நிலையில் சோக்சி வழக்கை விசாரித்த ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம், மெகுல் சோக்சியை ஆறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்தியாவிடம் நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பெல்ஜியம் அரசுக்கு ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் சாதகமாக பரிந்துரை வழங்கியுள்ளது. பெல்ஜியத்தில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இந்த ரகசியப் பரிந்துரை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா விடுத்துள்ள நாடு கடத்தல் கோரிக்கை குறித்து பெல்ஜியம் அரசு இனி முடிவெடுக்கும்.

Tags : Choksi ,India ,Belgian government ,New Delhi ,Mehul Choksi ,Punjab National Bank ,Belgium ,India… ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...