×

ராம ரதயாத்திரை தடுத்து நிறுத்தம் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை, பிப்.21: மதுரையில்  ராம ரத யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த பாஜ, இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக  நாடு முழுவதும்  ரத யாத்திரை நடத்தி, பொதுமக்களிடம் பொருளுதவிகள் பெறப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மதுரை நகரின் 100 வார்டுகளிலும் ரதயாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அனுமதியை போலீசார் மறுத்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டு, நீதிபதி ஹேமலதா நிபந்தனைகளுடன் ரதயாத்திரை நடத்த நேற்று மாலைக்குள் அனுமதி வழங்கி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று மதுரையில் ரதயாத்திரை தொடங்கியது. இதற்கான அனுமதி போலீஸ் தரப்பிலிருந்து நேற்றிரவு வரை வழங்கப்பட வில்லை எனத்தெரிகிறது. இதனால், போலீசார் ரத யாத்திரையை மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரமடைந்த பாஜ, இந்து முன்னணி அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்றிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சாலை மறியலால் இப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. நூற்றுக்கும் அதிக போலீசாரும் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானமாக வில்லை. இதனால் முடிவாக மறியலில் ஈடுபட்டவர்களில் 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Rama ,Rathathiedan ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்