×

கள்ளக்குறிச்சி மாவட்ட 4 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏவிஎம்.வினாயகமூர்த்தி (எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்), க.அழகுவேல் பாபு (கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர்), எம்.பாபு (கள்ளக்குறிச்சி நகர செயலாளர்), ஏவிஎம்.ரகு (எ) முகேஷ் (கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Kalalakurichi District 4 Supreme Executives Party ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,Supreme Court ,AVM ,Chichy District ,Vinayakamoorthy ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...