×

மக்காச்சோளம் மூட்டை ₹1,500 விலை குறைவால் விவசாயிகள் கவலை

சின்னாளபட்டி, பிப்.21: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ராமபுரம் பகுதியில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், மக்காச்சோளம் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ராமபுரம், நீலமலைக்கோட்டை, கன்னிவாடி, கட்டசின்னான்பட்டி, காமாட்சிபுரம், எல்லப்பட்டி, டி.புதுப்பட்டி, டி.பண்ணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.

தற்போது நன்கு வளர்ந்துள்ள மக்காச்சோளத்தை அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு விவசாயிகள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமபுரம் முத்தாலம்மன் கோயில் முன்பு உள்ள மைதானத்தில் மக்காச்சோளத்தை கொ ட்டி, சுத்தப்படுத்தி சாக்குப்பையில் 100 கிலோ பேக்கிங் செய்து மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். ஒரு வருடத்துக்கு முன்பு 100 கிலோ எடை கொண்ட மக்காச்சோள மூட்டை ரூ.2,500க்கு விலை போனது. தற்போது 100 கிலோ மூடை ரூ.1,500க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...