பழநி அருகே பாலசமுத்திரத்தில் அசுர வேக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு வேகத்தடை அமைக்க கோரிக்கை

பழநி, பிப். 21: பழநி அருகே பாலசமுத்திரத்தில் அசுர வேக வாகனங்களால் விபத்து அதிகரித்து வருகிறது. இதனால், சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது பாலசமுத்திரம் பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.  பழநியில் இருந்து பாலசமுத்திரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்து வந்தது. பொதுமக்களின் கோரிக்கையால் இச்சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால், இச்சாலையில் உள்ள ராமநாத நகரில் இருந்து பாலசமுத்திரம் வரை வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் அசுர வேகங்களில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.  நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயமடைகின்றனர். ஆனால், இதுவரை இச்சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இச்சாலையில் கோ யில், தர்ஹா, தேவாலயம் போன்ற வழிபாட்டு தளங்கள், பள்ளி, ஹோட்டல் மற்றும் பெட்ரோல் பங்க் போன்றவை உள்ளன. இதனால், பலர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதன் நகர்-பாலசமுத்திரம் சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>