×

தேவி கருமாரியம்மன் கோயில் விழா அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சின்னாளபட்டி, பிப். 21: சின்னாளபட்டியில் அம்பாத்துரை செல்லும் சாலையில் உள்ளது தேவி கருமாரியம்மன் கோயில். ஆண்டுதோறும் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் நகர்வலம் வருதல் மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா வெகு சிறப்பாக நடக்கும். இந்தாண்டு அரசு விதித்த கொரோனா விதிகளின்படி ஒருநாள் மட்டும் விழா நடத்த காவல்துறையினர் அனுமதித்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் கோயில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பால்குடங்களை சுமந்தபடி கோயிலுக்கு வந்தனர். அங்கு தேவி கருமாரியம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவந்த பால் மூலம் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. காலை 9 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Devi Karumariamman Temple Festival ,Agni Chatti ,
× RELATED கோவை தண்டு மாரியம்மன் கோயிலில்...