பிப்.21, 24ல் மங்களூர் ரயில் ஆலப்புழா வழி இயக்கம்

நாகர்கோவில், பிப்.19:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: ஏற்றுமானூர் - கோட்டயம் பிரிவில் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் எண் 06650 நாகர்கோவில் ஜங்ஷன் - மங்களூர் ஜங்ஷன் தினசரி சிறப்பு ரயில் பிப்ரவரி 21, 24ம் தேதிகளில் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரயில் வழக்கமாக செல்கின்ற மாவேலிக்கரை, செங்கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், ஏற்றுமானூர், பிறவம் ரோடு, திருப்புணித்துறை ஆகிய நிறுத்தங்களுக்கு செல்லாது. ஹரிப்பாடு, அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சவுத் ஆகிய இடங்களில் இந்த ரயிலுக்கு நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>