×

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

குமாரபாளையம், ஏப்.8: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குமாரபாளையம் கலைமகள் வீதியில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விடியல் பிரகாஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசினார். பள்ளி குழந்தைகளுக்கு தனிநபர் சுகாதாரம், சுற்றுச்சூழல் சுத்தம், ஆரோக்கிய முறையின் அவசியம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

காலையில் எழுந்ததும் பல்துலக்கி முகம் கழுவி குளித்து அன்றாட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. உணவு சாப்பிடும், முன்பு கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறையை பயன்படுத்திய பிறகு சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரம் தொடர்பான ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் ராணி, சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Kumarapalayam ,World Health Day ,Kalaimagal Road, Kumarapalayam ,Vidiyal Prakash… ,
× RELATED பரமத்திவேலூர் வட்டாரத்தில் பலத்த மழையால் வெப்பம் தணிந்தது