×

அரூரில் விழிப்புணர்வு பேரணி

அரூர், ஏப்.8: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி, ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் தொழிற் நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அரூர் இண்டர்நேசனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரூர் தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி, திருவிக நகர், பைபாஸ் சாலை மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் தாசில்தார் பெருமாள், ஆர்ஐ சின்னண்ணன், பள்ளி நிர்வாகிகள் கைலாசம், தென்னரசு, குமரவேல், கிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Aroor ,Tamil Nadu Assembly elections ,Assembly ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...