×

பக்தர்கள் மகிழ்ச்சி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக புதிய நெல் ரகம் டிஆர்ஒய் 4 அறிமுகம்

திருச்சி, பிப். 19: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக புதிய நெல் ரகமான டிஆர்ஒய்.4 ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல் சாகுபடியே பெருமளவில் மெற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்ணில் களர் உவர் தன்மை கூடிக்கொண்டே இருக்கிறது. களர், உவர் மற்றும் களர் உவர் நிலங்கள் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 4.5 லட்சம் எக்டேர் இருக்கிறது. பிரச்னைகள் இல்லாத மண்ணில் விளையும் நெல் ரகங்கள் குறிப்பிட்ட இந்த நிலங்களுக்கு ஏற்றது அல்ல. பயிர் இனப்பெருக்கத்துறை, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்காக பிரத்யேகமாக ஆராய்ச்சிகள் மெற்கொள்ளப்படுகிறது.

இதுவரை திருச்சி 1, திருச்சி 2 மற்றும் திருச்சி 3 ஆகிய நெல் ரகங்கள் முறையே 1995, 2002 மற்றும் 2010 ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. இவையெல்லாம் நீள சன்ன வடிவம், பருமனான வடிவம் உடையதாக அமைய பெற்றுள்ளது. இவை பெரும்பாலும் இட்லி போன்ற உணவுகள் தயாரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் சந்தையில் மத்திய சன்ன வடிவத்துடன் சாதத்துக்கு ஏற்றவாறு ரகங்கள் களர் உவர் மண்ணுக்கு ஏற்றவையாக இல்லை. மேலும் பிந்திய பருவமழை கிடைக்க பெறும் நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் வறட்சியை தாங்கும் ரகங்கள் நெல்லில் இதுவரை இல்லை. ஆகவே 120-130 நாட்களில் விளையும் நெல்ரக தேவை ஒன்று இருந்தது. இதற்காக தற்போது டி.ஆர்.ஒய்.4 ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு டி.ஆர்.ஒய்.4 ரகத்தை பார்வையிட திருச்சி வேளாண் இணை இயக்குநர் சாந்தி மற்றும் வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டங்கள்) லட்சுமணசுவாமி வந்திருந்தனர். பின்னர் டி.ஆர்.ஒய்.4 என்ற ரகத்தை களர் உவர் நில விவசாயிகள் சாகுபடி செய்து பயன் பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

Tags : Devotees ,Delta District Farmers ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...