×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவாரூர், பிப்.19: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் நேற்றும் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், டிரைவர்கள் உள்ளிட்ட காலி பணி உடனடியாக நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாதவர்களின் பதவி உயர்வுகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை துவக்கியுள்ளனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் 2வது நாளாக இந்த போராட்டமானது தொடர்ந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் 8 தாசில்தார் அலுவலகங்களிலும் வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம், மற்றும் மாவட்ட தலைர்வர் அசோக் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் 394 ஊழியர்கள் கலந்து கொண்ட நிலையில் நேற்று 402 பேர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தினால் அலுவலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது மட்டுமின்றி தேர்தல் தொடர்பான பணி, சான்றிதழ் வழங்கும் பணி உட்பட பல்வேறு அரசு பணிகள் நேற்றும் 2வது நாளாக பாதிக்கப்பட்டது.

Tags : Strike ,Revenue employees ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து