×

2வது நாளாக அரசு பணிகள் பாதிப்பு திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூர், பிப்.19: கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் கொரோனாவால் உயிரிழந்த உதவியாளர் கனகசுந்தரம் குடும்பத்திற்கு அரசு நிதிஉதவியாக ரூ.50 லட்சம் வழங்குவதுடன் அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும். இதே போல் மாநிலம் முழுவதும் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூ.50 லட்சமும், கருணை அடிப்படையிலான பணியும் வழங்கிட வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்திட வேண்டும். குற்றச்சாட்டு குறிப்பாணைகளை நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வலங்கைமான்
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பெருந்திரள் முறையீட்டு போராட்டத்திற்கு சென்றதால் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Demonstration ,Rural Development Officers Association ,Thiruvarur Collector ,Office ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்