×

சாலை விதிகளை கடைப்பிடிப்பது பற்றி பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

திருவாரூர். பிப்.19: சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியானது ஒரு வார காலத்திற்கு பதில் ஒரு மாத காலத்திற்கு நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிப்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்த பாதுகாப்பு வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு முகாமானது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழகத்தின் நாகை மண்டல வணிக மேலாளர் ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு பஸ்களை எவ்வாறு இயக்க வேண்டும். வளைவு மற்றும் பாலங்களில் வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். 10 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Tags : bus drivers ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி