வலங்கைமான் அருகே மாயமான லோடுமேன் சடலமாக மீட்பு

வலங்கைமான், பிப்.19: வலங்கைமான் அடுத்த சாத்தனூர் பகுதியில் 4 தினங்களுக்கு முன் காணாமல் போன லோடுமேன் அழுகிய நிலையில் தொங்கிய சடலத்தை போலீசார் மீட்டனர். வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் ஊராட்சி சாத்தனூர் ஆதிதிராவிட தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செல்வம்(47), லோடுமேன். இவருக்கு எழிலரசி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் செல்வத்தின் மகன் நீலகண்டன் மன்னார்குடியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மனஉளைச்சலில் செல்வம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். செல்வத்தின் மூத்த மகளுக்கு திருமணம் செய்வதற்காக அவரது மனைவி ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பூந்தோட்டம் சாத்தனூர் பகுதியிலுள்ள மரத்தில் ஆண் சடலம் தொங்குவதை கண்ட சிறுவர்கள் அதிர்ச்சி ஊருக்குள் தெரிவித்தனர். தகவலறிந்த அரித்துவாரமங்கலம் போலீசார் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அது காணாமல்போன செல்வம் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: