வேன் பறிமுதல் மானிய சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, பிப்.19: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு நிறுவனம் மூலம் ஏஜென்சி அமைக்கப்பட்டு மானிய விலையில் பொதுமக்களுக்கு வீட்டு உபயோகத்திற்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.300 விற்ற சிலிண்டர் தற்போது ரூ.795க்கு கொடுக்கப்படுகிறது. பின்னர் மானியத் தொகை சிலிண்டர் ஒன்றுக்கு 30 சதவீதம் மானியமாக பயனாளிகள் வங்கி கணக்கில் வைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ரூ.214 வரை சிலிண்டர் மானியம் பயனாளிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பயனாளிகளை மனரீதியாக சிலிண்டர் விலை உயர்வை ஏற்க வைத்துவிட்டனர். மத்திய அரசு மானிய சிலிண்டர் வழங்குவதை வர்த்தக ரீதியாக பார்க்க கூடாது. தற்பொழுது ரூ.24தான் ஒரு சிலிண்டர் மானியமாக பயனாளிகள் கணக்கில் வைக்கப்படுகிறது. அதுவும் பல நபர்களுக்கு ஏற்றப்படுவது இல்லை.

ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.100 சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது நியாயம் அற்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். பொருளாதார நிலை கொரோனா காலத்திற்கு பின்னர் முன்னேறாத நிலையில் மானியத்தை ரகசியமாக குறைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆதலால் மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு சிலிண்டர் மானியம் ரூ.214 நேரடியாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். சிலிண்டர் விலையும் ரூ.600க்கு குறைக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இல்லையேல் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: