×

குடந்தை சக்கரபாணி சுவாமி கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கும்பகோணம், பிப்.19: கும்பகோணத்தில் மாசிமக பிரமோற்சவ முன்னிட்டு நேற்று சக்ரபாணி சுவாமி, ஆதிவராகப் பெருமாள், ராஜகோபால் சுவாமி ஆகிய கோயிலில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைண ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர 10 நாள் விழா நடைபெறும் மாசிமக பிரமோற்சவம் மிகவும் விசேஷமானது. இவ்வாண்டிற்காண மாசிமக பிரமோற்சவ துவக்கமாக நேற்று ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் காளஹஸ்தீஸ்வரர் என 6 சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. ஆறு சைவத்தலங்களில் மாசிமகப்பெருவிழா ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது இதனையடுத்து, நேற்று வைண ஸ்தலமான சக்ரபாணிசுவாமி கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருளி, பட்டாட்சார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள் வாத்தியங்கள் ஒலிக்க,  பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றபட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : ceremony ,Kuttan Chakrabarty Swami Temple ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா