அலுவலகங்கள் வெறிச்சோடின தகுதியான விவசாயிகளுக்கு உடனே பயிர் கடன் வழங்க வேண்டு்ம் கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவையாறு, பிப்.19: திருவையாறு அடுத்த லிங்கத்தடி புதுத்தெருவில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ்நாடு உழவர் பேரியிக்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் முன்னரசு தலைமையில் நடைபெற்றது. உழவர் பேரியிக்க மாவட்ட நிர்வாகிகள் அரசூர் ஆறுமுகம், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிங்காரவேலு வரவேற்றார். கூட்டத்தில் உழவர் பேரியிக்க மாநிலத் தலைவர் ஆலயமணி, மாநில துணைச்செயலாளர் ஜோதிராஜ், மாநில துணைத்தலைவர் கலியமூர்த்தி, மாநில துணை அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தகுதியான விவாசயிகளுக்கு உடனே பயிர் கடன் வழங்க அரசை கேட்டுக்கொள்வது, பாபநாசம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல அரச நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபநாசத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் உழவர் பேரியிக்க ஒன்றிய பொறுப்பாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

Related Stories:

>