எரிபொருள் விலையேற்றம் கண்டித்து டூவீலருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.19: தஞ்சாவூர் ரயிலடி அருகே நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பெட்ரோல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மாநகர செயலாளர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனே உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலையையும் சமையல் கேஸ் விலையையும் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும் விறகு அடுப்பில் சமையல் செய்வது போல் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: