கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு மருத்துவ குணம் கொண்ட கொடுக்காப்புளி அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகத்தில் சீசன் நாட்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் கனி வகைகளில் கொடுக்காப்புளியும் ஒன்றாக உள்ளது. திண்டுக்கல், நத்தம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் கொடுக்காப்புளி அதிகளவு விளைவிக்கப்படுகிறது.
நார்சத்து, வைட்டமின் சி, சப்போனின்கள் போன்ற பல்வேறு மருத்துவ குணங்களை இது கொண்டுள்ளது. ஜீரண சக்தியை மேம்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல்வேறு பலன்களை இது கொண்டுள்ளது.
அந்த வகையில் திண்டுக்கல் போன்ற மாவட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடுக்காப்புளி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சீசன் சமயத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த வகை கொடுக்காப்புளியை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
