×

திமுகவினர் 500 பேர் கைது பூதலூர் அடுத்த கடையக்குடியில் பயிரிட்டுள்ள 300 ஏக்கர் பயிருக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

திருக்காட்டுப்பள்ளி, பிப்.19: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் கடையக்குடி பகுதியில் காலதாமதமாக நடவு செய்யப்பட்ட 300 ஏக்கர் நெற்பயிருக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூதலூர் பகுதியில் கடையக்குடி, சுரக்குடிப்பட்டி, சோளகம்பட்டி பகுதியில் சுமார் 300 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிட்டாலும், இப்பகுதிக்கு உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் கடந்த டிசம்பர் மாதம் தான் தண்ணீர் வந்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது நெற்பயிர் அனைத்தும் கதிர் விடும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் நெற்பயிருக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று கடையக்குடி கிராம விவசாயிகள் பாலதண்டாயுதபாணி தலைமையில் ஒன்று கூடி கடையக்குடி காட்டுவாரி வாய்க்காலில், இன்னும் ஒரு மாத காலத்துக்கு தொடர்ந்து தண்ணீர் விட வேண்டும் என்பதை வலிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் விவசாயிகள் தெட்சிணாமூர்த்தி, எடிசன், தங்கவேலு, மதியழகன், உதயகுமார், பாபு, ஜீவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : arrests ,DMK ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...