பாபநாசம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு

பாபநாசம், பிப்.19: பாபநாசம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இச்சாலையில் பாபநாசத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர் செல்லும் வாகன ஓட்டிகள் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் சாலியமங்கலம் சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாலியமங்கலம் சாலையில் குண்டும், குழியுமாக இருப்பதாக தினகரன் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாலை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தரப்பிற்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>