×

அரிமளம் அருகே பரபரப்பு அறந்தாங்கியில் 915 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்கல்

அறந்தாங்கி, பிப்.19: அறந்தாங்கியில் திருமணமாகாத ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 915 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி அறந்தாங்கியில் நடைபெற்றது. அறந்தாங்கி எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி, ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 915 பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அறந்தாங்கி தெற்கு பெரியசாமி, மணமேல்குடி துரைமாணிக்கம், அறந்தாங்கி நகர அதிமுக செயலாளர் ஆதிமோகனகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் 2018ம் ஆண்டு ஜுன் மாதம் வரையில் திருமணமான பெண்களுக்கு மட்டுமே நேற்று திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் பெற வந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் திருமணம் ஆனவர்கள் என்பதால், அவர்களில் பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து தாலிக்கு தங்கம் பெற்றனர். அவர்களில் சிலர் கூறியது: 2017ம் ஆண்டில் திருமணம் ஆனவர்களுக்கே தற்போதுதான், (அதுவும் தேர்தல் வருவதால்தான்) திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்குகின்றனர். தமிழக அரசு மீதமுள்ள பெண்களுக்கும் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : women ,Arimalam ,Tarappi Aranthangi ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...