குடுமியான்மலை தோட்டக்கலை பண்ணைக்கு விவசாயிகள் புரிந்துணர்வு பயணம்

பொன்னமராவதி, பிப்.19: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டார விவசாயிகளுக்கு பாதுகாக்கப்பட்ட முறையில் காய்கறி சாகுபடி, மாவட்டத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். பொன்னமராவதி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம் என்ற இனத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட சூழலில் கொய்மலர் மற்றும் காய்கறி சாகுபடி என்ற தலைப்பில், குடுமியான்மலை, அரசு தோட்டக்கலை பண்ணைக்கு, கண்டுணர்வு பயணமாக 50 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு தோட்டக்கலை பண்ணையின் ,உதவி தோட்டக்கலை அலுவலர் பிரியங்கா, பாதுகாக்கப்பட்ட முறையில் தரமான காய்கறி நாற்று உற்பத்தி மற்றும் பாதுகாக்கப்பட்ட முறையில் காய்கறி சாகுபடி செய்வதன் நன்மைகள் மற்றும்; காய்கறி விதை தேர்வு, உரம், களை நிர்வாகம், பசுமை குடில் அமைத்தலின் நன்மைகள் மற்றும் அவற்றின் காலநிலை, தட்பவெப்ப முறை, பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பசுமை குடில் மற்றும் மா கன்றுகளில் ஒட்டு கட்டும் முறை, மண்புழு உரம் உற்பத்தி உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜீவ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து விவசாயிகளை கண்டுணர்வு பயணம் அழைத்து சென்று வந்தனர்.

Related Stories: