ஆய்வு கூட்டத்தில் எச்சரிக்கை விராலிமலை அருகே பைக் மீது கார் மோதி பெண் பரிதாப பலி

விராலிமலை, பிப்.19: விராலிமலை அருகே இரு சக்கரவாகனம் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். விவசாயி. இவரது மனைவி தைலம்மை (50). இவர் தனது பைக்கில் விராலிமலை- திருச்சி நெடுஞ்சாலையில் பாத்திமாநகருக்கு சொந்த வேலையாக சென்று விட்டு வீடு திரும்பினார். பைக் விராலிமலை திருச்சி- தேசிய நெடுஞ்சாலை கொண்டமநாயக்கன் பட்டி பிரிவு ரோடு அருகே வந்தது. அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்றகார் மோதியது. இதில் சம்பவ இடத்தில் தைலம்மை பலியானார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>