தா.பழூர் அருகே மாயமான அனுமன் சிலை கிணற்றில் மீட்பு

தா.பழூர், பிப்.19:தா.பழூர் அருகே மாயமான அனுமன் சிலை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குணமங்கலம் கிராமம் நடுத்தெருவில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் இருந்த சுமார் ஒரு அடி அளவுள்ள அனுமன் கற் சிலையை காணவில்லை. இதுகுறித்து இக்கோயில் செயல் அலுவலர் சரவணன் கற்சிலையை காணவில்லை என விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு விக்கிரமங்கலம் எஸ்ஐ சரத்குமார் மற்றும் போலீசார் கற்சிலையை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோயில் வளாகத்தின் உள்ளே உள்ள கிணற்றில் தண்ணீரை இரைத்து தேடி பார்த்தனர். அப்பொழுது காணாமல் போன கற்சிலை சேற்றில் கிடந்தது. பின்னர் அதை வெளியே எடுத்து தூய்மைப்படுத்தி, அபிஷேகம் செய்து அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்தனர்.

Related Stories:

>