×

நீதிமன்ற உத்தரவின்படி

காரைக்கால், பிப்.19: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு அடுத்து சுமார் ஒன்றரை ஏக்கர் (4 மா 78 குழி) இடம் உள்ளது. இந்த இடம் அரசுக்கு சொந்தமா? அல்லது தனியாருக்கு சொந்தமா? என கடந்த 60 ஆண்டு காலமாக சர்ச்சை நீடித்து வந்த நிலையில் கோர்ட் உத்தரவுப்படி அந்த இடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அடுத்துள்ள இடம் (4 மா 78 குழி) தங்களுக்கு சொந்தமானது என்று முத்துராமலிங்கம் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி மற்றும் அவரது உறவினர்களான புனிதவதி, வாசுகி, சிங்காரவேலு கல்யாணசுந்தரம், மோகன்தாஸ் காமாட்சி ஆகியோர் 1963ம் ஆண்டு முதல் உரிமை கொண்டாடி காரைக்கால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கின் பிரதிவாதியான அப்போதைய கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆஜராகாததால் வாதிக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தது.

இதன் காரணமாக கடந்த 29.12.2000 அன்று தீர்ப்பின்படி அந்த இடத்திற்கு 13 லட்சத்து 59 ஆயிரத்து 228 ரூபாய் இழப்பீடு கொடுக்க நேர்ந்தது. ஆனால் அந்த இடத்திற்கு தற்போதைய விலை நிர்ணயம் கேட்டு சுமார் 60 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என வாதியானவர் மீண்டும் காரைக்கால் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்தார். அந்த இடம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து வாதி மீண்டும் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த காரைக்கால் பிரின்சிபல் டிஸ்ட்ரிக் முனிசிபல் கோர்ட் ஏற்கனவே 2015ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு சரிதான் என்றும், இது கொம்யூன் பஞ்சாயத்துக்கு (அரசுக்கு) சொந்தமான இடம் தான் என்றும் கடந்த 24.7.2020ல் தீர்ப்பளித்தது. இதனால் கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இதன்படி அந்த இடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா சர்ச்சைக்குரிய அந்த இடத்திற்கு வந்து நேற்று பார்வையிட்டார். அவருடன் தாசில்தார் பொய்யாத மூர்த்தி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி ஆகியோர் உடனிருந்தனர். சம்மந்தப்பட்ட நபரை அழைத்து வந்து அந்த இடத்தை கையகப்படுத்தவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட இடத்தை கொம்யூன் பஞ்சாயத்தின் பெயருக்கு விரைந்து மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி தெரிவித்துள்ளார். கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை 1969ல் பொருத்தப்பட்ட விளக்கு இந்த கலங்கரை விளக்கத்தில் உள்ள லைட் கடந்த 1883ம் ஆண்டு மினிக்காய் கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்ட ஒளிச்சாதனம் ஆகும். இது கடந்த 1967ம் ஆண்டு மினிக்காய் கலங்கரை விளக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு சென்னை கலங்கரை விளக்க பணிமனையில் பழுதுபார்த்து புதுபிக்கப்பட்டு 1969ம் ஆண்டு நாகை கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ