×

காரைக்காலில் சிங்காரவேலர் பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவிப்பு


காரைக்கால், பிப்.19: காரைக்காலில் சிங்காரவேலர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மீனவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொழிலாளர்களுக்காக போராடியவரும், மே தினத்தை உருவாக்கியவருமான சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் நேற்று (18ம் தேதி) கொண்டாடப்பட்டது. இதையொட்டி காரைக்கால் கடற்கரை சாலையில் அமைந்துள்ள சிங்காரவேலரின் முழு உருவ வெண்கல சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு, காசாகுடிமேடு உட்பட 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில மீனவரணி தலைவர் அரசன் தலைமையில் காங்கிரசார் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Evening parade ,Singaravelar ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...