×

பொறையாறில் கல்லூரி மாணவிகளுக்கு தப்பாட்ட கலைபயிற்சி

தரங்கம்பாடி, பிப்.19: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் கல்லூரியில் தப்பாட்டம் கலை பயிற்சி 3 நாட்கள் நடந்தது. தமிழர்களின் பாரம்பரிய கலையான தப்பாட்டத்தை வளர்க்கும் நோக்கிலும், இன்றைய இளைஞர்களுக்கிடையே அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் பொறையார் டிபிஎம்எல் கல்லூரியில் வரலாற்றுதுறை, தஞ்சாவூர் இந்திய அரசு தென்னக பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுதுறை ஆகியோருடன் இணைந்து 3 நாட்கள் தப்பாட்ட கலை பயிற்சி நடைபெற்றது. வரலாற்றுதுறை தலைவர் மல்லிகா புண்ணியவதி பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சியில் டேவிட் கலியபெருமாள் மற்றும் அவரது குழுவினர் பயிற்சி அளித்தனர். வரலாற்றுதுறை பேராசிரியர்கள் ஜீலியஸ்விஜயகுமார், ஜோயல் அமிர்தராஜ், பேராசிரியர் செல்வராஜ் ஆகியோர் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தனர். இதில் 15 மாணவ, மாணவிகளும் மற்றும் இளைஞர்கள் 10 பேரும் பயிற்சி பெற்றனர்.

Tags : Dappatta ,college students ,
× RELATED கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி