×

பக்தர்கள் வேண்டுகோள் கரூரில் தேர்வு மையத்தை தேர்வாணை தலைவர் ஆய்வு


கரூர், பிப்.19: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத்தேர்வு நடைபெறும் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆய்வு குறித்து அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் பணியாற்றுகின்ற ஒவ்வொரு அரசு ஊழியரும் பணிபுரியும் காலத்தில் பல்வேறு துறைத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறும்போது துறைரீதியாக பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதி காண் பருவம் பெறுவதற்கும் பயன்படுகிறது. அதற்காக தமிழகத்தில் அரசு வேலையில் உள்ள பணியாளர்களுக்கு கடந்த 14ம் தேதி முதல் 21ம்தேதி வரை 151 விதமான தலைப்புகளில் தேர்வு எழுதுவதற்கு திட்டமிடப்பட்டு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று தொழில் துறை, புள்ளியியல் துறை, பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை, தமிழ்நாடு வக்போர்டு உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.தமிழக அளவில் 33 மாவட்ட மையங்களில் 227 இடங்களில் நடைபெறும் இந்த துறை தேர்வுகளில் 54,161 பணியாளர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதி வருகின்றனர் என்றார். இந்த ஆய்வின் போது, டிஆர்ஓ ராஜேந்திரன், கரூர் ஆர்டிஓ பாலசுப்ரமணியன், தாசில்தார் செந்தில் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Tags : examination center ,devotees ,Karur ,
× RELATED தேர்தல் நடத்தும் அலுவலர்...