- ஆர்.
- காங்
- பாஜக
- முதல் அமைச்சர்
- புதுச்சேரி
- கே. ஸ்டாலின்
- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- திமுகா
- கூட்டணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுகா ஊராட்சி
- K. கூட்டம்
- ஸ்டாலின்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் 9ம்தேதியும், தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்தேதியும் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், திமுக அரசின் சாதனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி வாக்கு சேகரித்து வருகிறார். கடந்த மார்ச் 31ம் தேதி திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். நெல்லையில் நேற்று முன்தினம் 2ம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில், 3ம் கட்ட தேர்தல் பரப்புரையை புதுச்சேரியில் இன்று தொடங்கினார். புதுச்சேரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆதரித்து பிஷைனார்.
இதில் முதலமைச்சர் பேசியதாவது; “தமிழ்நாட்டின் சகோதர மாநிலம் புதுச்சேரி. தமிழ்நாட்டு மக்களிடம் உள்ள உணர்வுதான் புதுச்சேரி மக்களிடமும் உள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தலை இம்முறை மாற்றியுள்ளனர். தேர்தல் தேதியை மாற்றினால் உணர்வை மாற்ற முடியுமா?. தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறார்கள்.
என்.ஆர்.காங்.-பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார். புகழ்பெற்ற புதுச்சேரியை பாஜகவும் என்.ஆர்.காங்கிரஸும் என்ன நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்கள்?. புதுச்சேரியின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தவர் புதுவை சிவம். அரசியல் மாண்புகளை பாஜக குழிதோண்டி புதைத்து வருகிறது. புதுச்சேரி தனது பாரம்பரிய பெருமைகளை இழந்து கொண்டிருக்கிறது. டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு தலையாட்டும் கூட்டத்தை புதுச்சேரி மக்களும் விரும்பவில்லை.
16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு, சட்டமன்றத்திற்கு மரியாதை உள்ளதா?. ஆளுநர் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதலமைச்சராக வைத்துள்ளது பாஜக. புதுச்சேரியில் ஆல் இன் ஆலாக ஆளுநர்தான் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரிக்கான புதிய விடியல் நாள் ஏப்.9ம் தேதி, அதற்கு மக்கள் தயாரா?. மக்கள் கட்டளையை நிறைவேற்றும் அரசாக புதுச்சேரி அரசு இருக்க வேண்டும்.
தாய்மொழியை இழந்த இனங்கள், வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. புதுச்சேரியில் சி.பி.எஸ்.சி பாடத்தைக் கொண்டு வந்து தாய் மொழி கல்வியை அழித்துள்ளது என்.டி.ஏ. கூட்டணி. Best புதுச்சேரி ஆக்குவோம் என்று கூறினார் பிரதமர் மோடி; இப்போது Worst புதுச்சேரி ஆகியுள்ளது. வில்லியனூரில் ஒரு அமைச்சருக்கு சொந்தமான கிடங்கில் இருந்து பல கோடி மதிப்புள்ள சந்தன எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கல்காரர்களின் புகலிடமாக புதுச்சேரியை மாற்றியுள்ளது பாஜக – என்.ஆர்.காங். கூட்டணி. தரமற்ற மருந்துகளை கொள்முதல் செய்து மக்களின் உயிரோடு விளையாடி இருக்கிறார்கள்.
ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 அப்பாவிகள் உயிரிழந்தது எப்படி? புதுச்சேரி அரசின் மெகா ஊழல்தான். புதுச்சேரிக்கு ஒன்றிய அரசால் மாநில அந்தஸ்து வழங்க முடியாதா?. எந்த முகத்தை வைத்துக்கொண்டு புதுச்சேரிக்கு பிரதமர் வாக்கு கேட்டு வருகிறார்?. இவ்வளவு அவலங்களை புதுச்சேரி சந்தித்ததற்கு பிரதமர் மோடியும் அமித் ஷாவும்தான் காரணம்.
5 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தலை ரங்கசாமி நடத்த நினைத்தாரா?. தமிழ்நாட்டில் உள்ள பாஜக அடிமை எடப்பாடி பழனிசாமி போலதான் புதுச்சேரியில் ரங்கசாமியும்.கூட்டணி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டவர்தான் ரங்கசாமி. பீகாரின் நிதிஷ்குமார் நிலை ரங்கசாமிக்கு வராது என என்ன நிச்சயம்?” என பேசினார்.
