கரூர் சுங்ககேட் அருகே பயணியர் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை

கரூர், பிப்.19: கரூர் சுங்ககேட் அருகே பயணிகளின் நலன் கருதி நிழற்குடை அமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, தாந்தோணிமலை, பாளையம், வெள்ளியணை போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமாநிலையூர், சுங்ககேட் வழியாக சென்று வருகிறது. சுங்ககேட் பகுதிக்கு முன்னதாக, பெட்ரோல் பங்க் அருகே உள்ள நிறுத்தத்தில் அனைத்து பயணிகளும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.

இந்த பகுதியில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்குடை எதுவும் இல்லை. எனவே, இந்த பகுதியினர் நலன் கருதி இந்த பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிழற்குடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: