குளித்தலையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

குளித்தலை, பிப். 19: கரூர் மாவட்டம் குளித்தலை கிராமியம் கூட்ட அரங்கில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கிராமியம் இயக்குனர் டாக்டர் நாராயணன் தலைமை வகித்தார். குளித்தலை நலவாழ்வு சங்க செயலாளர் கார்த்திகேயன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக பாண்டிச்சேரி யோகா பிலிப்பு கலந்து கொண்டார். இறுதியாக கிராமியம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண் குழுக்கள் கல்வி திட்ட பயனாளிகள் தடுப்பூசி பயன்படுத்திக்கொள்ள உறுதி மொழி ஏற்றனர் முடிவில் ஆசிரியை லோகேஸ்வரி நன்றி கூறினார்.

Related Stories:

>