விவசாயிகள் கோரிக்கை நங்கவரம் பேரூராட்சி, நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

குளித்தலை, பிப்.19: குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் களப் பணியாற்றுவது மற்றும் புதிய நகர திமுக பொறுப்பாளர் நியமிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, மாநில செயற்குழு சிவராமன், மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பேசுகையில், குளித்தலை தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். நங்கவரம் பேரூராட்சியில் உள்ள 16 வாக்குச்சாவடிகளிலும் 80 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்றார். இதில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர நிர்வாகி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories:

More