சுகாதார அலுவலகத்தில் செவிலியர், உதவியாளர் பணிக்கு நேர்காணல்

கரூர், பிப்.19: கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் செவிலியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள மினி கிளினிக்குகளில் செவிலியர் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றும் வகையில் விண்ணப்பம் கேட்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் நூற்றுக்கணக்கானோர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதனடிப்படையில், கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு, விண்ணப்பம் செய்திருந்த அனைவரும், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கரூர் மாவட்டத்தில் இருந்து நேர்காணலுக்கு வந்திருந்த அனைவருக்கும் நேற்று காலை முதல் மாலை வரை நேர்காணல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>