கரூர் வாங்கப்பாளையத்தில் செயல்படாத சிக்னல் அடிக்கடி விபத்து

கரூர், பிப். 19: கரூர் வாங்கப்பாளையத்தில் உள்ள சிக்னல் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் இருந்து மண்மங்கலம், வாங்கப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கான சாலை பிரிகிறது. இதில், பிரதான சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுநாள் வரை சிக்னல் பயன்பாடின்றி உள்ளது. இதனால் சிறுசிறு விபத்துக்கள் நடப்பதால் வாகனஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். அதிகளவு வாகன போக்குவரத்து இந்த சாலையில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>