திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம்

தாரமங்கலம், பிப். 19:  தாரமங்கலம் அடுத்த தெசவிளக்கு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 17 வயது மகள், சேலம் கோரிமேடு அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் இளங்கோவன் (19) என்பவர், திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இளங்கோவன் மற்றும் கல்லூரி மாணவியை மீட்டனர். மேலும், திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளங்கோவனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும், மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>