×

சத்துணவு பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்

அரூர், ஏப்.6: அரூர் ஒன்றிய சத்துணவு அமைப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், தர்மபுரி மாவட்ட செயலாளர் ஸ்ரீமதி தலைமையில் நடைபெற்றது. அரூர் ஒன்றிய செயலாளர் கலா வரவேற்று பேசினார். சங்கப் பொறுப்பாளர்கள் சாந்தம்மாள், செல்வி, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் அனைத்து பணியாளர்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.

அதே போல், அனைத்து சத்துணவு பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில தலைவர் மாதப்பன், முன்னாள் மாநில துணைத் தலைவர் பிரகாசம், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Nutrition Workers Association Executive Committee Meeting ,Arur ,Union Nutrition ,Organizers ,Association ,Executive Committee ,Dharmapuri District ,Srimathi ,Arur Union ,Kala ,Shanthammal ,Selvi ,Chitra ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...