×

கூட்டுறவு சங்க பணியாளர் சாவு

தர்மபுரி, ஏப்.6: அரூர் வட்டம், சிட்லிங் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55). இவர் சிட்லிங் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் இளநிலை எழுத்தராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், அலுவல் பணி நிமித்தமாக தர்மபுரியில் உள்ள கூட்டுறவு அச்சகத்துக்கு பைக்கில் சென்றுள்ளார். செம்மனஅள்ளி பகுதியில் வந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு, தனது அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், அவர்களின் பரிந்துரையின் பேரில், அக்கம் -பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, வழியிலேயே செல்வராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மதிகோண்பாளையம் போலீசார் விரைந்து சென்று செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த செல்வராஜூக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

 

Tags : Cooperative Society ,Dharmapuri ,Selvaraj ,Chitling ,Arur taluk ,Chitling Multipurpose Cooperative Society ,Chemmanalli ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...