ராசிபுரம் அருகே மாணவியிடம் சில்மிஷம் திருமணமான வாலிபர் கைது

ராசிபுரம். பிப்.19: ராசிபுரம் அருகே 10ம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த திருமணமான வாலிபர்  போஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கரளாக்காடு ஆயில்பட்டியைச் சேர்ந்த மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வீடு வீடாக குடிநீர் கேன் சப்ளை செய்து வரும் மெட்டாலா பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(24) என்பவருடன், மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஆறுமுகம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாயார், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரித்ததில், 2 குழந்தைகளின் தந்தையான ஆறுமுகம், தனக்கு திருமணமானதை மறைத்து மாணவியுடன் பழகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories:

>