திருச்செங்கோடு அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி நீச்சல் பழக சென்றபோது பரிதாபம்

திருச்செங்கோடு, பிப்.19: திருச்செங்கோடு அருகே ஒ. ராஜாபாளையம் ஊராட்சி அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (40) பெயிண்டர். இவரது மகன் ஸ்ரீநிதி திருச்செங்கோடு அரசு   மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று நீச்சல் பழகுவதற்காக கழரங்குட்டை பகுதியில் உள்ள குட்டைக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். குட்டையில் ஆழமான  பகுதிக்கு சென்ற போது, திடீரென நீரில் மூழ்கிய படி தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டான். உடன் நண்பர்கள் உதவி கேட்டு aசத்தம் போட்டனர்.இதை கண்டு வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து சிறுவனை குட்டையிலிருந்து மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இது குறித்த தகவலின் பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>