×

தொழில் அதிபர் இல்ல திருமணம் எம்பி, எம்எல்ஏக்கள் நேரில் வாழ்த்து

நாமக்கல், பிப். 19: நாமக்கல் சுப பீட்ஸ் மற்றும் சுப பவுல்ட்ரி பார்ம் நிறுவனங்களின் உரிமையாளர் யுவராஜ் மகள் நிவேதப்பிரியா, பரமத்திவேலூர் கேபிஎஸ் ராக்டிரில்ஸ் உரிமையாளர் செல்வராஜ் மகன் நிவாஷ் ஆகியோர் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு விழா, நாமக்கல் என்கே நிறுவனங்களின் தலைவர் கரையாம்புதூர் நல்லதம்பி- சாவித்ரி தம்பதியரின் தலைமையில், பொம்மகுட்டைமேடு லட்சுமி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
மணமக்களை, நாமக்கல் எம்பி சின்ராஜ், எம்எல்ஏ பாஸ்கர், கே.எஸ் மூர்த்தி எம்எல்ஏ, முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில்அதிபர்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.

Tags : Greetings ,business tycoon ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு