பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்

திருச்செங்கோடு, பிப்.19: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து எலச்சிப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சுரேஷ் தலைமை வகித்து பேசினார். ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், வெங்கடாசலம், ரமேஷ், மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: