×

கொல்லிமலை, எருமப்பட்டியில் ₹11 கோடியில் தார் சாலை பணி சந்திரசேகரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

சேந்தமங்கலம், பிப்.19: கொல்லிமலை ஒன்றியம், சித்தூர்நாடு ஊராட்சி பாலக்காட்டு புதூர் முதல் பேக் காட்டுப்புதூர் வரை, ₹5.32 கோடி மதிப்பில் புதிய தார்சாலை, குழி வளவு ஒத்தக்கடை சாலை முதல் தலக்கரை சுண்டக்காடு சாலை வழியாக ₹3.83 கோடியில் புதிய தார்சாலை, எருமப்பட்டி ஒன்றியம் பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவில் ₹10 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம், எருமப்பட்டி பழனி நகரில் ₹50 லட்சத்தில் தார்சாலை, எருமப்பட்டி பேரூராட்சியில் ₹1.25 கோடியில் தார்சாலை என மொத்தம் ₹11 கோடியில் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் சந்திரசேகரன் எம்எல்ஏ கலந்துகொண்டு, பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர்கள் மாதேஸ்வரி, லோகநாதன், மாவட்ட கவுன்சிலர்கள் சிவப்பிரகாஷ், தவமணி சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chandrasekaran MLA ,Erumappatti ,Kollimalai ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்