மூதாட்டி தற்கொலை

கிருஷ்ணகிரி, பிப்.19: வேப்பனஹள்ளி அருகே சீலேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சப்பன் மனைவி சீதம்மா(எ) ஓசிவம்மா (70). உடல்  நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், ஓசூர் மற்றும் பெங்களூருவில்  சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால், மனமுடைந்த அவர், கடந்த 16ம் தேதி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இந்நிலையில்,  அதே பகுதியில், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில்  சீதம்மா சடலமாக மிதந்தார். தகவலறிந்த வேப்பனஹள்ளி  போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில்,  உடல் நலக்குறைவால் மனவேதனையில் இருந்த  சீதம்மா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>