நரசிபுரத்தில் ₹8.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம்

கிருஷ்ணகிரி,  பிப்.19: சூளகிரி அருகே, ₹8.50 லட்சம் மதிப்பில் புதிய  ரேஷன் கடை கட்டிடத்தை முருகன் எம்எல்ஏ திறந்து வைத்தார். சூளகிரி  ஒன்றியம், அத்திமுகம் ஊராட்சி நரசிபுரத்தில், ₹8.50 லட்சம் மதிப்பில்  ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக  துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ., தலைமை தாங்கி,  புதிதாக கட்டப்பட்டுள்ள  ரேஷன் கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலாளர் நாகேஷ்,  மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷேக் ரஷீத்,  மாவட்ட கவுன்சிலர்கள்  சீனிவாசன், பாக்கியராஜ், திமுக நிர்வாகிகள் சீனப்பகவுடு, ராஜண்ணா, சுரேஷ்,  வெங்கடேஷ், பாஸ்கர்,  ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>