×

வேப்பனஹள்ளியில் 3 மினி கிளினிக் திறப்பு

கிருஷ்ணகிரி, பிப்.19: வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதியில், மினி கிளினிக் துவக்க விழா நடைபெற்றது. நெடுமருதி  கிராமத்தில் வீரோஜிப்பள்ளி, கோடிப்பள்ளி மற்றும் ஜிங்களூர் கிராமத்தில்  வி.மாதேப்பள்ளி, தாசிரிப்பள்ளி, அதிதிகுண்டா, சின்னமனவாரனப்பள்ளி, ஆவல்நத்தம் கிராமத்தில் குப்பச்சிப்பாறை, நெடுசாலை, சென்னசந்திரம் மற்றும்  பந்தலூர் ஆகிய பகுதிகளில் முதல்வரின் அம்மா கிளினிக்குகளை கே.பி.முனுசாமி எம்.பி., திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36 இடங்களில் மினி கிளினிக் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 32,317 பேர் மினி கிளினிக் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்கை சிறந்த முறையில்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : clinics ,Veppanahalli ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு